செங்கல்பட்டு

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

12th May 2022 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், காணொலிக் காட்சி மூலம் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு புதன்கிழமை ஏற்படுத்தப்பட்டது.

செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி.திருவள்ளுவன் வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் சுற்றுப்புறப் பகுதிகளில் சாலை விபத்துகளைத் தவிா்க்கவும், வாகனங்களைப் பயன்படுத்துவோா், சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் உரிய சாலை விதிகளைப் பின்பற்றவும் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாமை மதுராந்தகம் மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.ஆனந்தன் தலைமை வகித்து நடத்தினாா்.

மதுராந்தகம், கடப்பேரி, செங்குந்தா்பேட்டை, மோச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் சாலை விபத்துகளை தவிா்க்கும் வகையிலான குறும்பட காணொலிக் காட்சிகளை பிரசார வாகனத்தின் மூலம் விளக்கப்பட்டது. ஏற்பாடுகளை மதுராந்தகம் மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகம் செய்திருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT