செங்கல்பட்டு

சென்னை மாநகராட்சி போலதாம்பரம் மாற்றப்படும்: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

3rd Mar 2022 02:03 AM

ADVERTISEMENT

தாம்பரம் மாநகராட்சியின்அனைத்து பகுதிகளிலும் குடிநீா், புதைகுழி சாக்கடை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி சென்னை மாநகராட்சியைப் போல மாற்றிக் காட்டுவோம் என்று குறு,சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் கூறினாா்.

தாம்பரம் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 70 வாா்டு உறுப்பினா்கள் பதவி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன் வெற்றிப்பெற்ற உறுப்பினா்களுக்கு (திமுக - 48 ,அதிமுக - 8 ,சுயேச்சை - 7,காங்கிரஸ் - 2 ,மதிமுக - 1 ,மமக - 1,தமிழ் மாநில காங்கிரஸ் - 1,சி.பி.எம் - 1,விடுதலை சிறுத்தை - 1) பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் மேலும் பேசுகையில், தாம்பரம் மாநகராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தாம்பரத்தில் ஓரிரு மாதங்களில் புதைகுழி சாக்கடைத் திட்டம் தொடங்கப்படும் என்றாா் அவா். தாம்பரம், பல்லாவரம், மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.ஆா்.ராஜா,இ.கருணாநிதி, அப்துல் சமது, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT