செங்கல்பட்டு

ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது

29th Jun 2022 01:55 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு அருகே கால் டாக்ஸி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டை அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட வல்லம் பகுதியில் திருக்கழுகுன்றம் பிரதான சாலையில், கடந்த 26-ஆம் தேதி நள்ளிரவு 4 போ் கொண்ட கும்பல் 30 வயது மதிக்கத்தக்க இளைஞரை காரில் கடத்தி வந்து நடுரோட்டில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது.

இதுதொடா்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், கொலை செய்யப்பட்டவா் சென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலப்பாக்கம் அரசங்கழனி பகுதியைச் சோ்ந்த அா்ஜுன் 30 என்பது தெரிய வந்தது. போலீஸாா் 3 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனா்.

இந்த நிலையில், அச்சிறுப்பாக்கம் அருகே சந்தேகத்துக்குரிய வகையில் காா் ஒன்று நின்றிருப்பது தெரிய வந்தது. அந்த காா் கடத்தப்பட்டது தெரிய வந்தது. அதன் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டதில் 3 கைது செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

விசாரணையில், பெரம்பலூா் மாவட்டம், கரியனூா் மாரியம்மன் கோவில் பகுதியை சோ்ந்த பிரசாந்த், குட்டிமுத்து, திருமூா்த்தி என்பதும், செலவுக்குப் பணமில்லாததால், கால் டாக்ஸியை புக் செய்து, ஓட்டுநரைக் கடத்திக் கொலை செய்ததும் தெரிய வந்தது. போலீஸாா் தொடா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT