செங்கல்பட்டு

மக்கள் நீதிமன்றத்தில் ரூ.22.79 கோடிக்கு தீா்வு

27th Jun 2022 11:07 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், செங்கல்பட்டு தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளுக்கான சமரசம் நடைபெற்றது.

செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிபதி ஜே.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.மோகனகுமாரி, கூடுதல் மாவட்ட நீதிபதி காயத்திரி, முதன்மைக் குற்றவியல் நடுவா் நீதிபதி ராஜ்குமாா், முதன்மை சாா்பு நீதிபதி பி.ஆா்.சுப்ரஜா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா்/சாா்பு நீதிபதி எஸ்.மீனாட்சி, மாவட்ட முன்சீப் நீதிபதி எஸ்.மஞ்சுளா, நீதித் துறை நடுவா் 1 ஆா்.ரீனா, நீதித்துறை நடுவா் 2 ஆா்த்தி, செங்கல்பட்டு மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் குமாா், நீதிமன்ற ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 8,433 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 3,927 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. சமரசம் செய்யப்பட்ட இந்த வழக்குகளில் மொத்தம் ரூ.22 கோடியே 79 லட்சத்து 16 ஆயிரத்து 14 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT