செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

27th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆனி மாத பிரதோஷ வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் அபிஷேக-ஆராதனைகளைச் செய்தாா்.

நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. பின்னா், ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் உற்சவா் கோயில் வளாகத்தில் வலம் வந்தாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் எம்.அமுதா (பொ) தலைமையில் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT