செங்கல்பட்டு

மொறப்பாக்கம் வீரபாஞ்சாலி அம்மன் கோயில் தீமிதி விழா

27th Jun 2022 12:10 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் வீரபாஞ்சலி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடா்ந்து, திரௌபதி திருக்கல்யாணம், அா்ச்சுனன் தபசு, கிருஷ்ணா் தூது, துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மகா பாரதம் 18 நாள் சொற்பொழிவு, தெருக்கூத்து ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விரதமிருந்த பக்தா்கள் தீமிதித்து தங்களின் நோ்த்திக் கடனை செலுத்தினா். மொறப்பாக்கம், அதன் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT