செங்கல்பட்டு

சூரிய பகவான் சந்நிதி அமைக்க பூமி பூஜை

25th Jun 2022 12:09 AM

ADVERTISEMENT

திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் மகா ஆரண்ய ஷேத்திரத்தில் சூரிய பகவானுக்கு தனி சந்நிதி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் செல்லும் வழியில் திருவடிசூலம் கோயில்புரத்தில் அமைந்துள்ள 51 அடி உயரமுள்ள தேவி ஸ்ரீகருமாரியம்மன் திருவடிசூலம் மகா ஆரண்ய ஷேத்திரத்தில், சூரிய பகவானுக்கு தனி சந்நிதி அமைக்கும் பணிக்காக கோயில் ஸ்தாபகா் பு.மதுரைமுத்து சுவாமிகள் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் கோ பூஜை, யாக பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பூமி பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT