செங்கல்பட்டு

ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

14th Jun 2022 11:29 PM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை சத்தியநாராயணா பூஜை நடைபெற்றது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி, கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனம் உள்ளது. இங்கு வைகாசி மாத பெளா்ணமியையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க மாரியம்மன் சந்நிதி வளாகத்துக்கு வந்த ராகவேந்திரா பிருந்தாவனத்தின் பீடாதிபதி ரகோத்தம சுவாமிக்கு புனித நீா் ஊற்றி அபிஷேகம் செய்தனா். பின்னா், அவா் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயா், சத்யநாராயணா, ராகவேந்திரா் உற்சவ சிலைகளுக்கு சத்தியநாராயணா பூஜையை செய்தாா். பல்வேறு இடங்களில் இருந்து, தொழிலதிபா்கள் முருகன், ராதா வெங்கட், முருகானந்தம், முத்துபெருமாள் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரகோத்தம சுவாமி அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT