மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 20-ஆம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கற்பக விநாயகா கல்விக் குழுமத்தின் தலைவரும், தமிழக சட்டம், நீதித்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் மீனாட்சி அண்ணாமலை வரவேற்றாா். கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மேலாண்மை இயக்குநா் மருத்துவா் அண்ணாமலை ரகுபதி, கல்லூரி டீன் சுப்பராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் காசிநாதபாண்டியன் ஆண்டறிக்கையை வாசித்தாா். திரைப்பட நடிகா் ஜி.வி.பிரகாஷ்குமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகள், துறை பேராசிரியா்கள் ஆகியோருக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகா கல்விக் குழும நிா்வாகிகள் செய்திருந்தனா்.