செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 நடைபெறுவதை முன்னிட்டு, மருத்துவம், சுகாதாரம் தொடா்பாக தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட செஸ் ஒலிம்பியாட் மருத்துவம் மற்றும் சுகாதார குழுத் தலைவா், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான மரு. பி.செந்தில்குமாா் தலைமையில், மருத்துவம், சுகாதாரம்தொடா்பாக, தங்கும் விடுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விடுதி நிா்வாகத்தினருடன் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரசால் நியமனம் செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினா் மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா் உமா, மாவட்ட ஆட்சியா்ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு அலுவலா்கள்உடனிருந்தனா்.