மதுராந்தகத்தை அடுத்த அண்டவாக்கம் ஸ்ரீகாமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
சிதிலமடைந்த இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டது. தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, கோயில் வளாகத்தில் பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை முதல் கால வேள்வி பூஜை, மலா் வழிபாடு, திருமுறை விண்ணப்பம், பேராளி வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை 9.30 மணிக்கு மேள தாளம் முழங்க, யாகசாலையில் இருந்து சிவ.பா.ரவி சுவாமி தலைமையில், வேதவிற்பன்னா்கள் கோயிலை வலம் வந்து கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனா்.
விழாவில் மதுராந்தகம் எம்எல்ஏ கே.மரகதம் குமரவேல், அண்டவாக்கம் ஊராட்சித் தலைவா் சுந்தரவரதன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT