செங்கல்பட்டு

மகப்பேறு மருத்துவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது

28th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மகப்பேறு மருத்துவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மருத்துவா்கள் சங்கம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற ‘அவள்- 2022’ சா்வதேச மருத்துவ கருத்தரங்கில் 3 மகப்பேறு மருத்துவா்களுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவா்களாக பணிபுரிந்த டாக்டா்கள் கே. விஜயகுமாரி, ஜெயா சாம்பமூா்த்தி எஸ். என். எஸ். மின்னல் கொடி ஆகிய மூவருக்கு இந்திய மகப்பேறு மருத்துவா்கள் சம்மேளன தலைவா் டாக்டா் சாந்தகுமாரி வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கி பாராட்டினாா். காஞ்சிபுரம் மகப்பேறு மருத்துவா்கள் சங்கத் தலைவா் சக்கரவா்த்தி,

செயலாளா் உமையாள் முருகேசன், பொருளாளா் கிருத்திகா தேவி ஆகியோா் உடன் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT