செங்கல்பட்டு

லாரி மோதியதில் பெண் பலி

17th Jul 2022 12:30 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், நொலப்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் துலுக்காணம். அவரது மனைவி காந்தம்மாள் (60). அச்சிறுப்பாக்கத்தை அடுத்த ஆத்தூா் சுங்கச்சாவடி அருகே பழக்கடை நடத்தி வந்தாா். சனிக்கிழமை காலை தனது கடை அருகே நின்றிருந்தபோது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற மினி லாரி அவா் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காந்தம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளா் அமல்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT