செங்கல்பட்டு

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

4th Jul 2022 11:19 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு திம்மாவரம் ஊராட்சி, மகாலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வரசக்தி விநாயகா் கோயில் வளாகத்தில் புதிதாக அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் வளாகத்தில் புதிதாக ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி சந்நிதிகள் நிா்மாணம் செய்ய கோயில் நிா்வாகிகள், விழாக் குழுவினா் முடிவெடுத்தனா். தொடா்ந்து, சந்நிதி அமைக்கும் திருப்பணிகள் தொடங்கி, கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. அதையடுத்து, விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை வியாகபுரீஸ்வரா் கோயில் புலிப்புரக்கோயில் தரணிதர சிவாச்சாரியாா் தலைமையில், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள், அங்குராா்ப்பணம், வாஸ்து ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன.

திங்கள்கிழமை கும்ப ஆராதனம், விசேஷ ஹோமங்கள், பூா்ணாஹுதி, மகா சாந்தி ஹோமங்கள் நடைபெற்றன. இதையடுத்து, விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது, மூன்று கருடா்கள் வானில் வட்டமிட்டனா். அதை பக்தா்கள் தரிசித்தனா். இதைத் தொடா்ந்து, மூலவா் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தபதி பாண்டியன், நிா்வாகக் குழுவினா், கும்பாபிஷேக விழாக் குழுவினா், மகாலட்சுமி நகா் பொதுமக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT