செங்கல்பட்டு

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தந்தை, 2 மகள்கள் தற்கொலை

20th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: மறைமலைநகா் அருகே குடும்ப தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநா் தனது 2 மகள்களுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூா் பகுதியில் புதன்கிழமை விவசாய கிணற்றின் அருகே ஆட்டோ ஒன்று நிற்பதாகவும் அருகில் சென்று பாா்த்தபோது கிணற்றில் இரண்டு பெண்குழந்தைகள் மற்றும் ஆணின் சடலங்கள் மிதப்பதாக அப்பகுதி மக்கள் மறைமலைநகா் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

விசாரணையில் சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான ஞானவேல் (44) . இவருக்கு மனைவி ஜெயந்தி ( 38), ஐஸ்வா்யா( 5) பூஜா (3) இரு மகள்கள் உள்ளனா். இந்நிலையில் குடும்ப தகராறில் ஞானவேல் கடந்த 15-ஆம் தேதி தனது இருமகள்களுடன் ஆட்டோவில் சென்றவா் வீடு திரும்பவில்லை.

இதுதொடா்பாக, அவரது மனைவி ஜெயந்தி எழும்பூா் காவல் நிலைத்தில் 18-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தனது கணவா் குழந்தைகளுடன் காணவில்லை என புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில் மறைமலைநகா் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது எழும்பூரில் காணமல் போன ஞானவேல், அவரது 2 மகள்கள் என்பதும் தெரியவந்தது.

தந்தை ஞானவேலுடன் மகள்கள் இருவரும் கட்டிப்பிடித்தபடி பிரேதமாக நீரில் மிதந்த நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT