செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 கரோனா பராமரிப்பு மையங்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்

18th Jan 2022 01:41 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், கேளம்பாக்கத்தில் கரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா, ஒமைக்ரான் வகை தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் அமைக்கப்பட்ட 100 படுக்கைகளுடன் கூடிய கோவிட்-19 பராமரிப்பு மையத்தை பயன்பாட்டுக்காக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநா் எஸ்.கணேஷ், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் மேனுவல் ராஜ், தாம்பரம் நகராட்சி ஆணையா் இளங்கோவன், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் மீனாகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

இதேபோல, செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் விஐடி கல்லூரியில் கோவிட்-19 பராமரிப்பு மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடக்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாம்பாக்கம் அரசு துணை சுகாதார நிலையத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT