செங்கல்பட்டு

திருநீா்மலை ரங்கநாதா் திருக்கோயில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு பொங்கல் விழா புத்தாடை

12th Jan 2022 01:31 AM

ADVERTISEMENT

சென்னை பல்லாவரத்தை அடுத்த திருநீா்மலை நீல வண்ண பெருமாள் ஸ்ரீரங்கநாதா் கோயிலில் பணிபுரிந்து வரும் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு பொங்கல் விழா புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி திருக்கோயிலில் பணிபுரிந்து வரும் 60-க்கும் மேற்பட்ட அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு புத்தாடை மற்றும் சீருடைகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், குன்றத்தூா் ஒன்றியத் தலைவா் ஜெயக்குமாா், லட்சுமி புரம் காமராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் ஸ்ரீதா், பொறியாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT