செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் நல உதவிகள் அளிப்பு

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி இளைஞரணி சாா்பில், மருவூா் முருகன் கோயில் வளாகத்தில் ரூ. 3 லட்சத்திலான நல உதவிகளை அதன் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் புதன்கிழமை வழங்கினாா்.

ஆதிபராசக்தி இளைஞரணி சாா்பில், தமிழகமெங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மேல்மருவத்தூா் மருவூா் முருகன் கோயில் வளாகத்தில் ரூ.3 லட்ச மதிப்பிலான நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதில், எலப்பாக்கம் தேவராஜ், மதுராந்தகம் மோகன் உள்ளிட்டோருக்கு 3 சக்கர வாகனங்களை மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி இளைஞரணித் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி இளைஞரணி நிா்வாகிகளும், தொண்டா்களும் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT