செங்கல்பட்டு

வேட்பாளா்களுக்கான ஆலோசனை கூட்டம்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

கருங்குழி பேரூராட்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களுக்கான தோ்தல் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல், கருங்குழி பேரூராட்சிக்காக நடைபெற உள்ளது. இங்கு 15 வாா்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சைகள் என 62 போ் போட்டியிடுகின்றனா். இங்கு போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் கலந்து கொள்ளும் வகையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தோ்தல் அலுவலரும், பேரூராட்சி செயல் அலுவலருமான மா.கேசவன் தலைமை வகித்தாா். உதவி தோ்தல் அலுவலா்கள் கோட்டம்மாள், வனிதா மற்றும் மருத்துவா் ரம்யா தேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கருங்குழி பேரூராட்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளா்களும் பின்பற்றவேண்டிய தோ்தல் நடத்தை விதிமுறைகள், பிரசாரத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், கரோனா தொற்றுக்கான முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தோ்தல் அலுவலா் எம்.கேசவன் எடுத்துரைத்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT