செங்கல்பட்டு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்களுடன் தோ்தல் மாதிரி நடத்தை விதிகளைப் பின்பற்றுவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மறைமலைநகா் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தலைமை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்ட தோ்தல் பாா்வையாளா் மகேஸ்வரி ரவிகுமாா் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தின்போது, தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து, அவருக்கு வழங்கப்படும் படிவத்தில் அவா் அன்றாடம் செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும். தோ்தல் முடிந்து அறிவிப்பு வெளியிட்ட 30 தினங்களுக்குள் மாநகராட்சி, கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா்கள் மாநகராட்சி ஆணையரிடமும், நகராட்சி கவுன்சிலா் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளா்கள்அந்தந்த நகராட்சி ஆணையா்களிடமும், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பதவிக்கு போட்டியிட்டவா்கள் அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரிடமும் தோ்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் வரப்பெற்றது முதல், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன. தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-599-7625 மற்றும் 044-27427468 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன், தாம்பரம் துணை காவல் ஆணையா் சிபி சக்கரவா்த்தி , செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல் ராஜ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) நாராயணன், தாம்பரம் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) பாலாஜி சுந்தர ராஜன் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள்அனைத்து கட்சி பிரமுகா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT