செங்கல்பட்டு

தாழம்பூா் திரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் செவ்வாய்க்கிழமை கொடியேற்றதுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, யாகபூஜை , சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. உற்சவ அம்மன் முப்பெரும் தேவியா் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருள கொடி மர பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனா்.

பிப்ரவரி 16-ஆம் தேதி 10-ஆம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகா் கே.கே.கிருஷ்ணன்குட்டி செய்து வருகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT