மதுராந்தகம் நகா்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி தலைமை வகித்தாா். ஆணையா் என்.அருள், துணைத் தலைவா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 24 வாா்டுகளின் உறுப்பினா்கள் கலந்துகொண்டனா். நகராட்சிப் பொறியாளா் கெளரி, சுகாதார அலுவலா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் 16 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவை அனைத்தும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னா் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி குமாா் பதில் அளித்தாா்.