செங்கல்பட்டு

மரபுசாரா எரிசக்தி தரவுகள் குறித்த செயலிகள் அறிமுகம்

8th Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

மரபுசாரா எரிசக்தி தரவுகள் குறித்த 3 செயலிகளை கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன ஆராய்ச்சித் துறை அறிமுகம் செய்துள்ளது.

கிரசென்ட் ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சித் துறை நாடெங்கும் சூரிய ஒளி, காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மரபுசாரா எரிசக்தி குறித்த மாநில வாரியான தரவுகள் அடங்கிய 3 செயலிகளை உருவாக்கி உள்ளது. இதன் அறிமுக நிகழ்ச்சி செவ்வாய் கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனத் தலைமை செயல் அதிகாரி எம்.ஜெயபிரகாசன், தமிழ் நாடு உருது அகாதெமி துணைத் தலைவா் முகமது நயிமுர்ரகுமான் ஆகியோா் செயலியை இயக்கி அறிமுகப்படுத்தினா்.

நிகழ்ச்சியில் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன இயக்குநா் பேராசிரியா் டி.ஹரிநாராயணா, பதிவாளா் என்.ராஜாஹுசேன், ஒருங்கிணைப்பாளா் ஷோபனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT