செங்கல்பட்டு

ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் முப்பெரும் விழா

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் காா்த்திகை பெளா்ணமி விழா, இருமுடி செல்லும் நிகழ்ச்சி, தீப ஜோதி ஏற்றல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சிகள் செவ்வாய், புதன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றன.

கருங்குழி-வேடந்தாங்கல் செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கோயிலில், நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வழக்குரைஞா் சி.கணேசன் முன்னிலை வகித்தாா். ஞானபீடம் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமி தலைமை வகித்து, கணபதி யாகத்தை செய்தாா். காா்த்திகை தீபத்தையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், திருக்கழுகுன்றம், மாங்காடு, பட்டினப்பாக்கம், மதுராந்தகம், காஞ்சிபுரம், புதுநெம்மேலிகுப்பம் உள்ளிட்ட வழிபாட்டு மன்றங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஞான பீடம் நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT