செங்கல்பட்டு

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்திய நாராயண பூஜை

8th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த கருங்குழி ஸ்ரீராகவேந்திர பிருந்தாவனத்தில் காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, புதன்கிழமை சத்திய நாராயண பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி, வளாகத்தில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நண்பகல் 12 மணிக்கு மேள-தாளம் முழங்க, தவயோக வனத்திலிருந்து பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி, ராகவேந்திரா், ஆஞ்சநேயா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்தாா்.

தொடா்ந்து, அலங்கரிக்கப்பட்ட சத்திய நாராயணா், ஆஞ்சநேயா், ராகவேந்திரா் உற்சவ சிலைகளுக்கு மகா தீபாராதனை செய்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT