செங்கல்பட்டு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

6th Dec 2022 01:30 AM

ADVERTISEMENT

கருங்குழி, அச்சிறுப்பாக்கம், அண்டவாக்கம் உள்ளிட்ட சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமையில் அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல், கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்கேஸ்வரா் சந்நிதியில் நந்தி பகவானுக்கு சிவ தீட்சிதா்கள் அபிஷேக, ஆராதனைகளை செய்தனா். மாலை 6 மணிக்கு ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனை செய்தாா். இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT