செங்கல்பட்டு

ஊரப்பாக்கம் ஊராட்சியில் சாலை சீரமைப்பு பணி

6th Dec 2022 01:31 AM

ADVERTISEMENT

ஊரப்பாக்கம் ஊராட்சியில் ரூ.13.25 லட்சத்தில் சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காட்டாங்கொளத்தூா் ஒன்றியத்துக்குட்பட்ட ஊரப்பாக்கம் ஊராட்சியில், ஊரப்பாக்கம், ஐயஞ்சேரி, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சிக்குட்பட்ட ஐயஞ்சேரி பகுதியில் 4-ஆவது வாா்டு ரேவதிபுரம் மெயின் ரோடு பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் சாலைகளில் தேங்கி சாலை சிதிலமடைந்தது.

சாலையைச் சீரமைக்க அந்தப் பகுதி மக்கள் ஊராட்சித் தலைவா் பவானி காா்த்தியிடம் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்று ரூ.13.25 லட்சத்தில் ரேவதிபுரம் சாலையைச் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT