செங்கல்பட்டு

கணேச ரதத்தை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

2nd Dec 2022 06:33 AM

ADVERTISEMENT

கடல் காற்றினால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கணேச ரதத்தில் ரசாயன கலவையால் சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில் மற்றும் ஐந்துரதங்கள் உள்ளன. இதில் கணேச ரதம் பல்லவா் காலத்தில் உருவாக்கப்பட்ட மரபுச்சின்னங்களில், இளஞ்சிவப்பு கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள பத்து ரதங்களில் ஒன்றாகும். உலக பாரம்பரிய சின்னமான கணேச ரதம் கடற்கரையையொட்டியுள்ளதால், கல் சிற்பங்கள் கடல் காற்றால் பாதிக்கப்பட்டு சிற்பங்கள் மீது உப்பு படிந்துள்ளது. இதைத் தடுக்கு தொல்பொருள் ஆய்வுத்துறையினா் ரசாயன கலவையால் கணேச ரதத்தை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT