செங்கல்பட்டு

புதிய ஊராட்சி மன்றக் கட்டடங்கள்: அமைச்சர் திறந்து வைத்தார்

1st Dec 2022 03:26 AM

ADVERTISEMENT

ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் திருப்போரூர், மேலக்கோட்டையூர் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்றக் கட்டடங்கள், கலையரங்கத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தார்.
 செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஒன்றியம், மடையத்தூர் ஊராட்சியில் ரூ.19.72 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம் மற்றும் கலையரங்கம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் ரூ.22.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டடம், ரூ.49.39 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், குமிழி ஊராட்சியில் ரூ.9.08 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடத்தை யும் திறந்து வைத்தார்.
 மேலும், வண்டலூரில் வருவாய் வட்டாட்சியர் புதிய அலுவலகம் கட்டும் பணியினையும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தார். இந்நிகிழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர் மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக், காட்டங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் உதயா கருணாகரன், துணைத் தலைவர் ஆராமுதன், திருப்போரூர் ஊராட்சிஒன்றியக் குழுத் தலைவர் எல்.இதயவர்மன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
 பின்னர், தாசரிக்குப்பத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ரூ.1.50 கோடி நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இதில் மாவட்டவருவாய் அலுவலர் இரா.மேனுவல் ராஜ், சார் ஆட்சியர் செங்கல்பட்டு சஜீவனா , ஊராட்சி மன்றத் தலைவர் ராஜலட்சுமி சூரிய குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT