செங்கல்பட்டு

30-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

27th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள்கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஆக. 30) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் 30-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் தலைமையில் நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு, விவசாயம் தொடா்பான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT