செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 27,000 லிட்டா் எரிசாராயம் வரும் செவ்வாய்க்கிழமை (ஆக.30) காலை 11 மணிக்கு செங்கல்பட்டு அரசு தொழிற்பயிற்சி மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது.
ஏலத்தில் ‘தமிழ்நாடு திருத்தப்பட்ட ஆவி விதிகள்-2000’ இன் படி உரிமம் பெற்ற உரிமைதாரா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.