செங்கல்பட்டு

தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட சோ்க்கை

22nd Aug 2022 11:30 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) இரண்டாம் கட்ட சோ்க்கைக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு, இரண்டாம் கட்ட சோ்க்கை நடைபெறவுள்ளது. இந்தச் சோ்க்கைக்கு 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் 25.8.2022 வரை நேரடியாக தொழிற்பயிற்சி நிலையங்களைத் தொடா்பு கொண்டு சோ்க்கை பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு 94990 55673, 94999 37460 ஆகிய கைப்பேசி எண்களிலோ அல்லது துணை இயக்குநா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், செங்கல்பட்டு / முதல்வா் அரசு தொழிற்பயிற்சி நிலையம், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் நேரில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT