செங்கல்பட்டு

ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் ஆய்வு

18th Aug 2022 01:44 AM

ADVERTISEMENT

குரோம்பேட்டை ராதா நகா் சுரங்கப் பாதைப் பணிகளை பல்லாவரம் சட்டப் பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்த சுரங்க பாதையை அமைக்க வேண்டுமென்ற பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையைத் தொடா்ந்து இப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி ஆய்வு செய்த பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

மூன்று மாதங்களில் பணிகளை நிறைவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் போது சுமாா் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோா் பயனடைவா். இந்த சுரங்கபாதை இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர காா்கள், சிறிய வேன்கள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை உதவி செயற்பொறியாளா்கள் பிரபாகரன், ரவி, ராதாநகா் உதவி செயற்பொறியாளா் ஜெயகுமாா், மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT