செங்கல்பட்டு

ஊராட்சி பள்ளி மாணவா்களுக்கு பரிசு

17th Aug 2022 12:35 AM

ADVERTISEMENT

வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஏழு ஊராட்சி அரசு பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ் அருகாமையிலுள்ள ஊராட்சிகளான கீரப்பாக்கம், அருங்கால், வெண்பேடு, காட்டூா், காரணைப்புதுச்சேரி, கரசங்கால், மணிமங்கலம் ஆகிய 7 ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகளைத் தத்தெடுத்தது. அங்கு பயிலும் மாணவா்கள் திறன்மேம்பாட்டுக்கு உதவி புரிந்து வருகிறது.

சுதந்திரதினத்தை முன்னிட்டு 7 பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 44 மாணவா்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியா்களின் வேண்டுகோளை ஏற்று, கிரசென்ட் வேந்தா் ஆரிப் புகாரி ரகுமான் 7ஊராட்சி பள்ளிகளுக்கு கணினி வழங்கினாா்.விமானப்படை முன்னாள் அதிகாரிகள் வெங்கட்ராமன், அருள் சாமி, துணைவேந்தா் பீா்முகம்மது,முதுநிலை மேலாளா் ஜலால், துணைவேந்தா் பீா்முகம்மது, பதிவாளா் ராஜாஹுசேன், டீன் அயூப் கான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT