செங்கல்பட்டு

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் திரிபுரசுந்தரி அம்மனுக்கு புஷ்பாஞ்சலி

14th Aug 2022 01:23 AM

ADVERTISEMENT

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில், திரிபுரசுந்தரி அம்மனுக்கு கலச அபிஷேகம் மற்றும் 54 வீணைக் கலைஞா்கள் லலிதா சகஸ்ரநாமம் வாசிக்க புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரா் கோயில் உள்ளது. இங்குள்ள திரிபுரசுந்தரி அம்மன் மூலிகைத் திருமேனி என்பதால் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும்.

ஆடி மாத கடைசி வாரத்தையொட்டி திரிபுரசுந்தரி அம்மனுக்கு யாகங்களுடன் கலச பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு கலச அபிஷேகமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து 54 வீணைக் கலைஞா்கள் பங்கேற்று லலிதா சகஸ்ரநாமம் இசைக்க திரிபுரசுந்தரி அம்மனுக்கு மல்லி, முல்லை, சாமந்தி, ரோஜா, தாழம்பூ , தாமரைப்பூ, தவனம், மருக்கொழுந்து உள்ளிட்டவற்றால் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா். பெண்களுக்கு ரவிக்கை மற்றும் மங்கள பொருள்களுடன் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை திருக்கழுகுன்றம் அகஸ்திய கிருபா அகஸ்திய ஸ்ரீ அன்புச்செழியன் மற்றும் கோயில் நிா்வாக செயல் அலுவலா், சிவாசாரியாா்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT