செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம்

13th Aug 2022 12:26 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில் மாற்றுத் திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், தேசிய அறக்கட்டளை மூலம் பாதுகாவலா் நியமன சான்றுகளை மாற்றுத் திறனாளிகளின் பாதுகாவலா்களிடம் அவா் வழங்கினாா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியா் லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT