செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா

13th Aug 2022 01:32 PM

ADVERTISEMENT

சென்னை: சர்வதேச பட்டம் விடும் திருவிழா, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் 3 நாள்கள் நடைபெறுகிறது.

சர்வதேச பட்டம் விடும் திருவிழா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுவரை நடைபெற்று வந்தது. தற்போது முதல்முறையாக தமிழகத்தில் நடைபெற இருக்கிறது. 

இந்த விழாவை சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் துறை அமைச்சா் தா. மோ. அன்பரசன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் மா. மதிவேந்தன்   ஆகியோர் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவை தொடக்கி வைத்தனர்.

இந்த பட்டம் விடும் திருவிழாவில் வெளிநாடுகளில் இருந்து 4 குழுக்கள், இந்தியாவில் இருந்து 6 குழுக்கள் என மொத்தம் 10 குழுக்கள் கலந்துகொள்கின்றன. பார்வையாளர்களுக்கென பிரத்யேகமாக மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: உ.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

இந்த விழாவில், சிறுவர்களை இலவசமாக அனுமதிக்கவும், பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் வசூலிக்கவும் சுற்றுலாத் துறை முடிவு செய்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT