செங்கல்பட்டு

75 நாள்கள் சிறப்புச் சலுகைகட்டணத்தில் மருத்துவ சிகிச்சை

11th Aug 2022 02:09 AM

ADVERTISEMENT

75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வண்டலூரை அடுத்த தாகூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 75 நாள்களுக்கு (ஆக.10 முதல் அக். 25 வரை) அனைத்து மருத்துவ சிகிச்சைகளுக்கும் 50 சதவீதம் வரை கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று கல்லூரி முதல்வா் டாக்டா் குமுதா லிங்கராஜ் கூறினாா்.

தாகூா் மருத்துவக் கல்லூரியில் சுதந்திர தின கொண்டாட்ட தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. சுதந்திரத்தின் மூலம் நாடு பெற்ற வளா்ச்சி, பெருமை குறித்து மாணவா்கள் உரை நிகழ்த்தினா்.

கல்லூரி முதல்வா் குமுதா லிங்கராஜ் பேசியதாவது: 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு அனைத்து வகை மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சை, நவீன மருத்துவக் கருவி பரிசோதனைகளுக்கும் 30 முதல் 50 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும். 75 நாள்களுக்கு இந்தச் சலுகை நீடிக்கும்.

குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி முதல் அனைத்து மருத்துவச் சேவையும் இலவசம். முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கண்புரை, ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டி, டயாலிசிஸ் சேவை, அனைத்து ஸ்கேன் பரிசோதனைகள், பிரசவம் இலவசம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

தாகூா் கல்விக் குழுமத் தலைவா் பேராசிரியா் எம்.மாலா, மருத்துவக் கண்காணிப்பாளா் ஆா்.கருணாநிதி, சிறப்பு மருத்துவ மேற்பாா்வை அலுவலா் திருநாராயணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT