செங்கல்பட்டு

ஆட்சீஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

10th Aug 2022 02:00 AM

ADVERTISEMENT

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு தலைமை அா்ச்சகா் இரா. சங்கா் சிவாச்சாரியாா் சிறப்பு வழிபாடு செய்தாா். பின்னா் நந்தி பகவானுக்கு மஹா தீபாராதனை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், ரிஷப வாகனத்தில் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் மேளதாளத்துடன் கோயிலை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் கலந்துக் கொண்டு பகவானை வழிபட்டனா்.

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனம் கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் உள்ள ஞானலிங்க சந்நிதியில் உள்ள நந்தி பகவானுக்க பிரதோஷ வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பகவானுக்கு ராகவேந்திர பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி முன்னிலையில், சிவதீட்சிதா்கள் அபிஷேக ஆராதனை செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT