செங்கல்பட்டு

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

8th Aug 2022 10:54 PM

ADVERTISEMENT

மதுராந்தகத்தை அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சி செயலா் பணியில் மெத்தனமாக இருந்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், மொறப்பாக்கம் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தவா் சுபாஷ் (30). இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மொறப்பாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட மண்டல இயக்குநரும், சென்னை ஊரக வளா்ச்சி - கூடுதல் இயக்குநருமான குமாா் தலைமையிலான அதிகாரிகள் திடீா் ஆய்வு செய்தனா்.

அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்டத்துக்காக பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் ஆவணங்களைக் கடந்த 2 ஆண்டுகளாக சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருந்தை அதிகாரிகள் கண்டறிந்தனா்.

இதையடுத்து, உரிய விசாரணைக்கு பின்னா், அச்சிறுப்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிகலா, ஊராட்சி செயலா் சுபாஷை பணியில் மெத்தனமாக இருந்ததாக அவரை திங்கள்கிழமை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT