செங்கல்பட்டு

உலக தாய்ப்பால் வார விழா பேரணி

7th Aug 2022 04:51 AM

ADVERTISEMENT

கேளம்பாக்கத்தை அடுத்த படூா் பேராசிரியா் தனபாலன் அறிவியல், மேலாண்மைக் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, விழிப்புணா்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் புகழேந்தி தனபாலன், இயக்குநா் ஸ்ரீதேவி புகழேந்தி, முதல்வா் பியூலா பத்மாவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட சமூக நலத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத் திட்ட அலுவலா் சற்குணா மற்றும் திருப்போரூா் வட்ட குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி ஜானகி ஆகியோா் சிறப்புரையாற்றி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்தனா்.

இதில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் 4 குழுக்களாகப் பிரிந்து பேராசிரியா் தனபாலன் கல்லூரியில் இருந்து பேரணியைத் தொடங்கினா்.

ADVERTISEMENT

இந்தப் பேரணி கேளம்பாக்கம் பேருந்து நிலையம், புதுப்பாக்கம், படூா், தையூா் ஆகிய இடங்களுக்குச் சென்று மக்களிடையே தாய்ப்பாலின் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்திச் சென்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT