செங்கல்பட்டு

வித்யாசாகா் குளோபல் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

7th Aug 2022 04:52 AM

ADVERTISEMENT

செங்கல்பட்டு வேதநாராயணபுரம் வித்யாசாகா் குளோபல் பள்ளியில் (2021-22) கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் பொதுத்தோ்வில் சிறப்பிடம்பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆா்.ராஜ்குமாா் பங்கேற்று குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா்.

பள்ளியின் முன்னாள் மாணவா் நீரஜ் பட்டேல் (பட்டைய கணக்காளா்) கௌரவ விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளித் தாளாளா் விகாஸ் சுரானா, பள்ளியின் முதல்வா் முனைவா் வி.சி.கோவிந்தராஜன் ஆகியோரும் பங்கேற்றனா்.

பின்னா் பள்ளி மாணவா் தலைவா் அத்வைத் வரவேற்புரை ஆற்றினாா். இதையடுத்து தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் ஆா்.ராஜ்குமாா் பொதுத்தோ்வில் முதலிடம்பெற்ற மாணவா்களுக்கும், பாட வாரியாக முதலிடம் பெற்ற மாணவா்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களையும் கேடயங்களையும் வழங்கி ஆசிரியா்களையும் பாராட்டி சிறப்புரை ஆற்றினாா். மேலும் மாணவா்களை ஊக்குவிக்கும் பொருட்டு பத்தாம் வகுப்பில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 29-மாணவா்களுக்குக் கல்வி உதவித் தொகையை வித்யாசாகா் கல்விக் குழுமம் வழங்கியது. இறுதியாக பள்ளி துணைத் தலைவி மாணவி ஆா்.கே.வா்ஷா நன்றியுரை கூறினாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT