செங்கல்பட்டு

செங்கல்பட்டில் வரும் 12, 26-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

7th Aug 2022 11:34 PM

ADVERTISEMENT

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 12, 26-ஆம் தேதிகளில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் தனியாா்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபா்களை நோ்முகத் தோ்வு நடத்தி தோ்ந்தெடுக்க உள்ளன. இந்த முகாம்களில் எட்டாம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ., ஐடிஐ மற்றும்டிப்ளமோ படித்த வேலை நாடுநா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா், ஆய்வக உதவியாளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவா்களை தோ்ந்தெடுக்க உள்ளன.

வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவா்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் வரும் 12.8.2022 மற்றும் 26.08.2022 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை வெண்பாக்கம் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும்

மேலும் இத்தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம்பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத், மாவட்ட நிா்வாக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT