செங்கல்பட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

6th Aug 2022 09:58 PM

ADVERTISEMENT

செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், வரும் 12-ஆம் தேதி ஆட்சியா் தலைமையிலும், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் வரும் 26-ஆம் தேதியும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கடந்த 21.4.2022 அன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுரைகளின்படி, இரு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா் தலைமையிலும் மற்றும் மாதத்துக்கு ஒருமுறை வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, வரும் 12 மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள இந்தச் சிறப்பு மனுநீதி நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்களின் கோரிக்கைகள், குறைகளை மனுவாக அளித்து பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT