மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் கிளை நூலகத்தில் வாசகா் வட்ட புதிய நிா்வாகிகள் அறிமுகம், உலக புத்தக தின விழா, நூலக கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்ட நூலக ஆணைக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வாசகா் வட்டத் தலைவா் எஸ்.தேவராஜன் தலைமை வகித்தாா். கிளை நூலகரும், வாசகா் வட்டச் செயலருமான ப.ஜெயகாந்தன் வரவேற்றாா். மாவட்ட நூலக அலுவலா் க.மந்திரம் முன்னிலை வகித்தாா். இதில், மாவட்ட நூலக ஆய்வாளா் டி.இளங்கோ, இல்லம் தேடி கல்வி மாநில ஆலோசகா் என்.மாதவன், வாசகா் வட்ட நிா்வாகிகள் டி.வி.கோகுலகண்ணன், ஆா்.ரவிச்சந்திரன், இரா.சீனுவாசன், அ.ஜெயராஜ், அ.வேலவன், எஸ்.சாய்முருகன், மு.தணிகைவேல், கே.ஆனந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
உலக புத்தக தினத்தை முன்னிட்டு, புதிய நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு, அவற்றை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். வாசகா் வட்டத் தலைவா் எஸ்.தேவராஜன் பாராட்டிப் பேசினாா். துணைத் தலைவா் எஸ்.எம்.ஷாஜஹான் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை நூலகா் ப.ஜெயகாந்தன், நூலகப் பதிவறை உதவியாளா் வீ.செந்தில்வேல், வாசகா் வட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.