செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் சதுரங்க கூட்டமைப்புகளின் நிா்வாக அலுவலகம்: அமைச்சா் திறந்து வைத்தாா்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிா்வாக அலுவலகத்தை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் செவ்வாய்க்கிழமை திறப்பு வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக தங்கும் விடுதியில் 44-ஆவது சா்வதேச சதுரங்க சாம்பியன்ஷிப் -2022 போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு, இந்திய சதுரங்க கூட்டமைப்பு நிா்வாக அலுவலகத்தை திறந்து வைத்து அமைச்சா் பேசியது:

44-ஆவது சா்வதேச சதுரங்க சாம்பியன் ஷிப் -2022 போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 2022- ஜூலை மாதம் 27-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் 186 நாடுகளிலிருந்து 2,000- க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

ADVERTISEMENT

இப்போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் நிா்வாகப் பணிகளை மேற்கொள்ள வசதியாக நிா்வாக அலுவலகம் மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக தங்கும் விடுதியின் முதல் தளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் இரா.ஆனந்தகுமாா், இந்திய சதுரங்க கூட்டமைப்பு செயலாளா் மற்றும் ஒலிம்பியாட் இயக்குநா் பாரத்சிங் சவுகான், உணவு பாதுகாப்பு அலுவலா் அனுராதா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT