செங்கல்பட்டு

தொழில் பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

14th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு தொழில்பயிற்சி நிலையத்தில், பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வருகிற 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு-பயிற்சித் துறை, எம்எஸ்இ தொழில் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட அளவிலான தொழில் பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாமை வருகிற 21-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு தொழில்பயிற்சி நிலையத்தில் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடத்துகிறது.

இந்தத் தொழில் பழகுநா் சோ்க்கை முகாமில் ஐ.டி.ஐ. தோ்ச்சி பெற்றவா்கள், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது தோல்வி அடைந்தவா்கள் பங்கு பெற்று பயன் அடையலாம்.

ADVERTISEMENT

கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை 044-29894560 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT