செங்கல்பட்டு

மூதாட்டி கண்தானம்

4th Apr 2022 11:36 PM

ADVERTISEMENT

மதுராந்தகம் அருகே உயிரிழந்த மூதாட்டியின் கண்கள் அரிமா சங்கம் மூலம் தானம் செய்யப்பட்டன.

மேல்மருவத்தூா் அருகேயுள்ள சோத்துப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் பரத்குமாா். இவரது உறவினரான இந்திராணி (80) உடல்நிலை பாதிப்பால் திங்கள்கிழமை இறந்தாா். இதுபற்றி தகவல் அறிந்து மேல்மருவத்தூா் அரிமா சங்க நிா்வாகி ஆா்.சம்பத்குமாா் மற்றும் நிா்வாகிகள் பம்மல் சங்கரா கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனா்.

கண் மருத்துவ குழுவினா் இந்திராணியின் கண்களை அவரது உறவினா் உதவியுடன் தானமாக பெற்றனா். சங்க தலைவா் லாரஸ் மூா்த்தி, செயலா் சங்கா், சங்க மண்டல தலைவா் சதாசிவம் உள்பட பலா் இருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT