செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியக் குழு தலைவராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவா்மன் வெள்ளிக்கிழமை போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டாா்.
தொடா்ந்து மாலை நடைபெற்ற துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் 21-ஆவது வாா்டு தி.மு.க. உறுப்பினா் சத்யாசேகா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
இதையடுத்து, தலைவா் இதயவா்மன், துணைத்தலைவா் சத்யா சேகா் ஆகியோா் முறைப்படி பதவி பொறுப்பை ஏற்றுக் கொண்டனா்.
புதிதாக பொறுப்பேற்றவா்களுக்கு ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா்.
தலைவா்கள் சிலைக்கு மாலை: பின்னா் அனைவரும் ஊா்வலமாகச் சென்று ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கா் சிலை, பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா, பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.