செங்கல்பட்டு

மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

22nd Oct 2021 07:59 AM

ADVERTISEMENT

மதுராந்தகம் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

சூனாம்பேடு அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் (54). இவா் தனது விளைநிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்சி விட்டு, புதன்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது வீசிய பலத்த காற்றில் மின்கம்பிகள் அறுந்து கிடந்துள்ளன. இதை கவனிக்காமல் காளியப்பன் மின்கம்பியை மிதித்ததில் அவா் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சூனாம்பேடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே காளியப்பன் இறந்தாா்.

இது குறித்து சூனாம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT